×

மெக்காவுக்கு யுவன் புனித பயணம்

சென்னை: இசை அமைப்பாளர் இளையராஜாவின் 2வது மகன் யுவன் சங்கர் ராஜா, பல்வேறு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சில படங்களை தமிழில் தயாரித்துள்ளார். பல படங்களில் பின்னணி பாடியுள்ளார். 2003ல் தனது காதலி சுஜயா என்பவரை தனது வீட்டுக்கு தெரியாமல் பதிவுத்திருமணம் செய்தார். அவரை 2002ல் லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு சென்றபோது சந்தித்து காதல் கொண்டார். பிறகு 2005ல் பெற்றோர்கள் சம்மதத்துடன் சுஜயாவை திருமணம் செய்த யுவன் சங்கர் ராஜா, கருத்து வேறுபாடு காரணமாக 2008ல் சுஜயாவை விவாகரத்து செய்தார். பிறகு 2011ல் திருப்பதியில் ஷில்பா என்பவரை திருமணம் செய்த யுவன் சங்கர் ராஜா, கருத்து வேறுபாடு காரணமாக 2014ல் ஷில்பாவை விவாகரத்து செய்தார்.

பிறகு 2015ல் கீழக்கரையை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஷஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஸியா என்ற மகள் இருக்கிறார். இந்தநிலையில், 2014ல் இஸ்லாமிய  மதத்துக்கு மாறிவிட்டேன் என்று அறிவித்த யுவன் சங்கர் ராஜா, தனது பெயரை அப்துல்ஹாலிக் என்று மாற்றிக்கொண்டார். ஆனால், சினிமாவுக்காக யுவன் சங்கர் ராஜா என்ற பெயரையே பயன்படுத்தி வருகிறார்.  திருவல்லிக்கேணி  மசூதிக்கும், மவுண்ட் ரோடு தர்காவுக்கும் அடிக்கடி சென்று வரும் அவர், தற்போது இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்கா மற்றும் மதினாவுக்கு‘உம்ரா’ என்ற புனித பயணம் மேற் கொண்டு உள்ளார். உம்ராவுக்கான ஆடை அணிந்து பேருந்தில் பயணிக்கும் அவரது போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

Tags : Yuan ,Meckva , Yuvan Pilgrimage to Mecca
× RELATED விஜய்யுடன் டான்ஸ் ஆட ஸ்ரீலீலா மறுப்பு